பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, நல்லூர் கந்தம்பாளையம் அருகே சித்தம்பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (67). விவசாயம் பார்த்துக்கொண்டு தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த சாமியாத்தாள் கடந்த 7ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதி சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரித்தனர். இதில், கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (30) என்பவர், நண்பர் அஜித்குமாருடன் சேர்ந்து சாமியாத்தாளை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சாமியாத்தாளிடம் ேவலை செய்து நீக்கப்பட்ட ஆனந்தராஜ், நகை -பணத்திற்காக மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தனியாக வசித்த மூதாட்டி கொலையில் 2 பேர் கைது
0