திருவள்ளூர்: திருவள்ளூர் பேரம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்விரோதம் காரணமாக முகேஷ், தீபன், ஜாவித் ஆகியோர் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசியதில் இளைஞர் முகேஷ் உயிரிழந்தார். மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த தீபன், ஜாவித் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஆகாஷ் என்பவரின் கூட்டாளிகள் 3 பேரிடம் மப்பேடு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
நாட்டு வெடிகுண்டு வீசி கொலை – 3 பேரிடம் விசாரணை
0
previous post