தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ஜான் பாஷா ( 35). வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். இவர் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலை ஓரத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் புது வண்ணாரப்பேட்டை. ஏஏ திட்ட சாலையில் மது குடித்து விட்டு பாஷா போதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த புது வண்ணாரப்பேட்டை ரோந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் பாஷா அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தனிப்பட்டை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். அதன் பேரில் தேசிய நகரை சேர்ந்த குகன் என்கிற மலேக்கா (40) என்ற திருநங்கையை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், பாஷா சட்டை பையில் பணம் இருப்பதை பார்த்து ஆசைக்கு வர அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஜான்பாஷா அதற்கு மறுத்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது பாஷா திருநங்கையை திட்டியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த திருநங்கை பயங்கரமாக அடித்து தாக்கினார். இதில் பாஷாவுக்கு கழுத்து, இடுப்பு, வயிற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பலியானது தெரிந்தது.
புது வண்ணாரப்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து திருநங்கை மலேக்காவை கைது செய்து விசாரணை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து திருநங்கைகள் காவல் நிலையத்தில் ஒன்று கூடியினர்