மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சோமனூரை சேர்ந்த ரவிக்குமார் மகன் வருண்காந்த் (22) கடந்த மாதம் 12ம் தேதி அடித்துக்கொலை செய்யப்பட்டு, தோட்டத்தில் புதைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் காப்பக நிர்வாகிகள் உள்பட 11 பேர் ைகது செய்யப்பட்டனர். இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 18 பவுன் நகை மற்றும் ரூ.1.52 லட்சம் ரொக்கத்தை தனிப்படை எஸ்ஐ நவநீதகிருஷ்ணன் கணக்கில் காட்டாமல் சுருட்டியதாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தனிப்படையில் இருந்த மேட்டுப்பாளையம் எஸ்ஐ மகாராஜா, எஸ்ஐ நவநீதகிருஷ்ணனிடம் இருந்து கையாடல் பணம் ரூ.50 ஆயிரத்தை கமிஷனாக பெற்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை கோவை டிஐஜி சசிமோகன் சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். வேலியே பயிரை மேய்ந்ததுபோல கைதானவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை கையாடல் செய்ததாக ஒரு எஸ்ஐ கைதானதும், அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் கமிஷன் பெற்றதாக மற்றொரு எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.