சென்னை : முரசொலி மாறன் படைத்தளித்த ஆக்கங்கள் திமுகவின் அறிவுப் புதையலாகத் திகழ்கின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இறுதிவரை கொள்கை முரசமென ஒலித்த முரசொலி மாறனின் திராவிட இயக்கப் பயணத்தை இன்றைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று அவருக்கு நன்றி செலுத்துவோம்!,”எனத் தெரிவித்துள்ளார்.