சென்னை: ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது. 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அரசாணை வெளியிட்டுள்ளனர். 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். உத்தேச நகராட்சிகளின் வார்டு எல்லைகளை வரையறை செய்து நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்