சென்னை: நகராட்சி ஆணையர்கள் தங்களது குடியிருப்புகளில் நகராட்சி பணியாளர்களை வீட்டுப் பணிக்கு பணியமர்த்தக் கூடாது என்று நகராட்சி நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற புகார்கள் வரும் தருவாயில், சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்கள் மீது உரிய விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகராட்சி ஆணையர்கள் தமது குடியிருப்புகளில், நகராட்சிகளில் பணிபுரியும் நகராட்சி பணியாளர்களை வீட்டு வேலைக்கு பணியமர்த்துவதாக தெரிய வருகிறது.
நகராட்சிப் பணியாளர்களை வீட்டு வேலைக்கு பணியமர்த்தக் கூடாது
0