புதுடெல்லி: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.464.41 கோடி கடன் வாங்கிய பண மோசடி வழக்கில், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மேக்ஸ் பிளக்ஸ் நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு பதிந்தது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, அந்நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தியது. இதில் ரூ.12 கோடி மதிப்பிலான மூலப் பொருட்கள் உள்பட ரூ.20.11 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டன.