மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
மும்பை: மும்பையின் வணிக நகரமான செம்பூரில் இன்று காலை கடைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்ததாக தீயணைப்பு படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து இன்று அதிகாலை 5.20 மணியளவில் செம்பூர் பகுதியின் சித்தார்த் காலனியில் நடைபெற்றுள்ளது. கட்டிடத்தின் தரை தளம் கடையாகவும், மேல் தளம் குடியிருப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கீழ் தளத்தில் உள்ள ஒரு கடையின் மின் வயரிங் மற்றும் நிறுவலில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக ராஜ்வாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அனைவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் பாரிஸ் குப்தா (7), மஞ்சு பிரேம் குப்தா (30), அனிதா குப்தா (39), பிரேம் குப்தா (30) மற்றும் நரேந்திர குப்தா (10) என அடையாளம் காணப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


