மும்பை: மகாராஷ்டிராவில் பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் நவி மும்பையில் இருந்த அடுக்கு மாடி கட்டிடம் நேற்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நவி மும்பை பேலாபூர் தொகுதியை சேர்ந்த ஷாபாஸ் கிராமத்தில் உள்ள 4 அடுக்குமாடி கட்டிடத்தில 13 குடியிருப்புகள் மற்றும் 3 கடைகள் உள்ளன.
இந்த குடியிருப்பு வளாகம் நேற்று காலை 4.50 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 54 பேரை பத்திரமாக மீட்டனர்.