மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து 79,000 புள்ளிகளானது. 2,000 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்த நிலையில் தற்போது 1,468 புள்ளிகள் குறைந்து 79,517 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 486 புள்ளிகள் குறைந்து 24,231 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.