மும்பை: 10 நாட்களாக தொடர்ந்து சரிவில் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.25%-க்கு மேல் அதிகரித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 818 புள்ளிகள் அதிகரித்து 73,809 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்து வர்த்தகம் நடைபெறுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 278 புள்ளிகள் அதிகரித்து 22,361 புள்ளிகளாக உள்ளது.
ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தை ஒட்டி இந்திய பங்குச்சந்தைகளிலும் உணர்வு காணப்படுகிறது . கனடா, மெக்சிகோவின் ஏற்றுமதி பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த வரி குறைக்கலாம் என அமெரிக்க அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அமைச்சர் கினா ரெய்மாண்டோ அறிவிப்பால் வரிவிதிப்பு போரின் தீவிரம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறிது.
மகிந்திரா, மகிந்திரா பங்கு 4.5%, பவர்கிரிட், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல் பங்குகள் 4% விலை உயர்ந்து வர்த்தகம் ஆகிறது. என்டிபிசி பங்கு 3.8%, டாடா மோட்டார்ஸ் பங்கு 3%, டெக் மகிந்திரா பங்கு 2.97% விலை உயர்ந்து விற்பனை ஆகிறது. பாரத்தி ஏர்டெல், கோட்டக் வங்கி, இன்போசிஸ், எச்டிஎப்சி டெக், டிசிஎஸ், மாருதி சூசுகி பங்குகள் விலை உயர்ந்துள்ளது.