மும்பை: இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் தொடர்ந்து 3வது நாளாக சரிவடைந்ததால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 571 புள்ளிகள் சரிந்து 66,230 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 150 புள்ளிகள் சரிந்து 19,742 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.