மும்பை: இஸ்ரேல்- -காசா போர் தீவிரமடைந்து வரும் நிலையில் 6-வது நாளாக இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவடைந்து வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 901 புள்ளிகள் சரிந்து 63,148 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. மகிந்திரா அண்ட் மகிந்திரா பங்கு 4%, பஜாஜ் பைனான்ஸ் பங்கு 3.5%, ஏசியன் பெயின்ட்ஸ் பங்கு 3.3% விலை குறைந்தன. பஜாஜ் ஃபின்செர்வ் பங்கு 3%, நெஸ்லே இந்தியா பங்கு 2.8%, டைட்டன் பங்கு 2.7%, ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் பங்கு 2.5% விலை குறைந்தன. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 265 புள்ளிகள் சரிந்து 18,857 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.