மும்பை: இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்துள்ள போதிலும் இந்திய பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 82,100 புள்ளிகளை ஒட்டியது. காலையில் வர்த்தகம் தொடங்கியபோது 825 புள்ளி உயர்ந்த நிலையில் சற்று குறைந்து 700 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பார்த்தி ஏர்டெல், மகிந்திரா மற்றும் மகிந்திரா, நெஸ்லே, பவர்கிரிட், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 215 புள்ளிகள் உயர்ந்து 25,008 புள்ளிகளாக உள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!!
0