மும்பை: தொடக்கத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எணகள் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்து 82,515 புள்ளிகளானது. நண்பகல் வர்த்தகத்தில் 391 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் இறுதியில் 123 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 16 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37 புள்ளிகள் அதிகரித்து 25,141 புள்ளிகளில் நிறைவு பெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகமான 2,995 நிறுவன பங்குகளில் 1,608 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. 1,304 நிறுவன பங்குகள் விலை குறைந்து வர்த்தகமான நிலையில் 83 நிறுவன பங்குகள் விலை மாற்றமின்றி முடிந்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்வு..!!
0