மும்பை: வர்த்தகம் தொடங்கியபோது 480 புள்ளி வரை சரிந்த சென்செக்ஸ் பிறகு 400 புள்ளி உயர்ந்து, இறுதியில் 57 புள்ளிகள் குறைந்து. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57 புள்ளிகள் சரிந்து 79,649 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21 புள்ளிகள் குறைந்து 24,347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தொடக்கநேர வர்த்தகத்தில் நிஃப்டி 155 புள்ளிகள் சரிந்து, பின் 105 புள்ளிகள் உயர்ந்து இறுதியில் குறைந்து முடிந்தது.