மும்பை: மும்பை – அகமதாபாத் இடையே, ரூ.1.08 லட்சம் கோடியில் புல்லட் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் சூரத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து தேசிய அதிவேக ரயில் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டத்தின் கீழ் நாட்டிலேயே முதல்முறையாக நவீன முறையில் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. அதன்படி, ஜப்பானில் உள்ள அதிவேக ரயில் அமைப்பான ஷிங்காசென்னில் பயன்படுத்தப்படும் ஜே-ஸ்லாப் பேலஸ்ட்லெஸ் டிராக் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய முறையில் ரயில் தண்டவாளத்தின் கீழ் ஸ்லீப்பர்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் பாலஸ்ட்லெஸ் டிராக்கில் உள்ள படுக்கையானது வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டால் ஆனது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாதையில் மணிக்கு 350 கிமீ வேகத்தில் ரயில் செல்ல முடியும். மும்பை -அகமதாபாத் இடையேயான 508 கிமீ துாரத்தை 3 மணி நேரத்தில் சென்று விடும்.