சென்னை: மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்ட டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது. டெல், ஏசர், லெனோவா, எச்பி உள்ளிட்ட நிறுவனங்கள் டெண்டரில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. டெண்டருக்கு முன் நடந்த கூட்டத்தில் நிறுவனங்களின் சந்தேகங்களுக்கு எல்காட் நிறுவனம் விளக்கம் அளித்தது.