தேவையானவை:
கொண்டைக்கடலை,
சோயா பீன்ஸ்,
பச்சை நிலக்கடலை,
பட்டாணி,
தட்டாம் பயறு (எல்லாம் சேர்த்து) – 2 கப்,
புளி – பெரிய எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி – 3 ஸ்பூன்,
பெருங்காயம்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்,
பழுத்த தக்காளி – 2,
தேங்காய்த் துருவல் – 4 ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
கடுகு, உளுந்தம்பருப்பு – தலா 1 ஸ்பூன்,
இரண்டிரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 6,
எண்ணெய் – 3 ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
வெங்காயம் – 2.
செய்முறை:
பயறு வகைகளை ஏழு மணி நேரம் ஊற வைத்து களைந்து குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாய், தக்காளி மூன்றையும் நைசாக அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணை சேர்த்து கடுகு, உளுந்தம்பருப்பை தாளித்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதில் உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அதில் புளிக்கரைசலை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி, தேங்காய் விழுதினை சேர்க்கவும். எல்லாம் கொதித்து வரும் போது அதில் வேகவைத்துள்ள பயறு வகைகளை சேர்க்கவும். அனைத்தும் நன்கு கொதித்து திக்கான பதம் வந்தவுடன் சிறிது எண்ணை சேர்த்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்திக்கும் சுவையாக இருக்கும்.