*ஆண்டுவிழாவை சிறப்பாக கொண்டாட தீர்மானம்
கடவூர் கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி முள்ளிப்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் ஆண்டு விழா நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.கரூர் மாவட்டம் கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி முள்ளிப்பாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நீலா வேல்முருகன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வளர்மதி, பிடிஏ தலைவர் வேல்முருகன் பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பிடிஏ தலைவர் வேல்முருகன் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தப்பட்டு வருகிறது.
இல்லம்தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், தற்காப்பு கலை பயிற்சி, கல்வி சுற்றுலா, இலக்கிய மன்றம், கலைத்திருவிழா, விளையாட்டுப்போட்டிகள் என்று மாணவ மாணவியர்கள் உற்சாக படிப்பதற்கு ஏதுவான சூழல்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் செயல் வழிக்கற்றல் பயிற்சிகள், புத்தகம், நோட்டுப்புத்தகம், ஒரு வருடத்திற்கு 4 இலவச சீருடைகள், காலை மற்றும் மதிய உணவு, வாரம் முழுவதும் மசாலா முட்டை, கலந்த சாதம், காலணிகள், வண்ணப்பெண்சில்கள், உடற்கல்வி, விளையாட்டு வகுப்புகள், புத்தகப் பை, யோகா பயிற்சிகள், கணிணி பயிற்சிகள், காணொளி வழிக்கல்வி, நீதி போதனை வகுப்புகள், சிறப்பான விளையாட்டு கட்டமைப்புகள், போட்டிக்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துதல் என்று தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருவதோடு கிராமப்புற மாணவ மாணவியர்கள் இன்று தரமான கல்வி பயின்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து குழந்தை திருமணங்களை கண்டறிந்து தடுப்பது, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பிரச்சனைகள், பள்ளிக்கு தேவையான கழிப்பிடம், குடிநீர், கூடுதல் வகுப்பு கட்டிடம் அமைத்தல், புதிய மாணவர்களை சேர்த்தல், கற்றல் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தல், இல்லம்தேடி கல்வி திட்டத்தை முழுமையாக பயன்பெற செய்தல், மாணவர்களின் சுகாதாரம், குறித்து எடுத்துரைத்தல், வருகின்ற 20ம் தேதி (வியாழக்கிழமை) பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பள்ளி மேலாண்மை குழு அனைத்து நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.