திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலாத் தளத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த எஸ்.ஐ, 3 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி ஜியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.