அண்ணா நகர்: சென்னை முகப்பேரில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து, நிர்வாகம் ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசாரும் வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நிபுணர்களும் மோப்பநாய் உதவியுடன் வந்து சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. இதுகுறித்து, ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.