நீலகிரி: முதுமலையில் நில மோசடிக்கு ஆளான பழங்குடியின மக்களிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். முதுமலை மாற்று குடியமர்வு திட்டத்தில் அரசு நிலத்தை பணம் கொடுத்து பெற்று மோசடிக்கு உள்ளானதாக புகார் அளிக்கப்பட்டது. கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது குதரத்துல்லா நேரில் விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றார்.