பெங்களூரு: தன் மீதான முடா வழக்கை எதிர்த்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்ந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. மைசூருவில் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய நிலத்தில் ரூ.4,000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு என புகாரளிக்கப்பட்டுள்ளது.