கரூர்: முஸ்டகிணத்துப்பட்டி பகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர் மணி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடைபெற்று வந்தது. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் மைத்துனர் மணி வீட்டில் 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்றது. சேகரின் வங்கிக் கணக்கில் இருந்து மணியின் வங்கி கணக்கிற்கு லட்சக்கணக்கில் பணம் மாற்றப்பட்ட புகாரில் சோதனை நடைபெற்றது.