நாமக்கல், கரூர் சிபிசிஐடி போலீசார் இணைந்து 5 மணி நேரம் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி சாலையில் உள்ள கணேசபுரம் கோயில் தெருவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் சிபிசிஐடி சோதனை நடத்தியது. சேலம் சாலையில் உள்ள ஜி.ஆர்.எம். அலுவலகம், பொன் நகரில் உள்ள அலுவலகம் என 3 இடங்களில் சிபிசிஐடி போலீஸ் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நிறைவு பெற்றது.