கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி கைது செய்தது. கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை அபகரிக்க முயன்றதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகியோரை கரூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதே வழக்கில் கைதாகி, திருச்சி சிறையில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் முன்ஜாமின் மனு கடந்த 3 நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்யப்பட்டது.