Sunday, February 25, 2024
Home » ம.பி. அமைச்சரவை விரிவாக்கம் 28 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு

ம.பி. அமைச்சரவை விரிவாக்கம் 28 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு

by Karthik Yash

போபால்: மத்தியபிரதேச அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டு 28 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். மத்தியபிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 17ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜ பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இதையடுத்து மத்தியபிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்றார். ஜகதீஷ் தேவ்டா, ராஜீவ் சுக்லா ஆகியோர் துணைமுதல்வர்களாக பொறுப்பேற்றனர். மத்தியபிரதேசத்தில் முதல்வர் உள்பட அமைச்சரவையின் பலம் 38ஆக இருக்கலாம்.

இந்நிலையில் நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 28 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஒன்றிய முன்னாள் அமைச்சர் பிரகலாத் படேல், பாஜ தேசிய பொதுசெயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, பிரதுமான் சிங் தோமர், கரண்சிங் வர்மா, ராகேஷ் சிங், உதய் பிரதாப் சிங் உள்பட 10 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், மேலும் 10 பேர் இணையமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் மங்குபாய் படேல் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் குறித்து எந்த தகவலும் வௌியிடப்படவில்லை. இதையடுத்து மத்தியபிரதேச அமைச்சரவையின் பலம் 31ஆக அதிகரித்துள்ளது.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi