சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 25ம் தேதி ஆன்லைனில் தொடங்கியது. இதுவரை 16 ஆயிரத்து 600 பேரில் 7 ஆயிரத்து 500 பேர் மட்டுமே விருப்ப இடங்களை உறுதி செய்துள்ளனர்.இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ கலந்தாய்வை நடத்தும் மருத்துவ கலந்தாய்வுக்குழு இடங்களை உறுதி செய்தவர்களுக்கான இறுதி முடிவை வெளியிடுவதை 2 நாட்களுக்கு தள்ளிவைத்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககமும் கலந்தாய்வுக்கான அட்டவணையை மாற்றி இருக்கிறது. அதன்படி, விருப்ப இடங்களை தேர்வு செய்து உறுதி செய்வதற்காக ஏற்கனவே 31ம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்த அவகாசத்தை 3ம் தேதி வரை மாற்றியுள்ளது.