டெல்லி: ம.பி. பாஜக அமைச்சரின் மன்னிப்பை முழுமையாக நிராகரிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவதூறாக பேசிவிட்டு சில நேரங்களில் முதலை கண்ணீர் வடிப்பதை ஏற்கமுடியாது. பா.ஜ.க. அமைச்சர் விஜய் ஷா பேச்சால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் வெட்கக்கேடு. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகு அமைச்சர் மன்னிப்பு கேட்டதை ஏற்க முடியாது. கர்னல் சோபியா குறித்து அமைச்சர் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையானது