இந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984ம் ஆண்டு டிசம்பரில் யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 5479 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் நீண்ட கால உடல் பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மூடப்பட்ட இந்த ஆலையில் இருந்த நச்சு கழிவுகளை அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஜனவரிமாதம் ஆலையில் இருந்த சுமார் 337 டன் கழிவுகள் சீலிடப்பட்ட கன்டெய்னர் மூலமாக பிதாம்பூரில் உள்ள ஆலைக்கு கொண்டு வரப்பட்டது. ஆலையில் மூன்று சோதனைகளின்போது சுமார் 30 டன் கழிவுகள் எரிக்கப்பட்டது. மீதமிருந்த 307 டன் கழிவுப்பொருட்களை எரிக்கும் பணியானது மே 5ம் தேதி தொடங்கியது. ஜூன் 20-30ம் தேதி இரவு வரை இந்த கழிவுப்பொருட்களை எரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ம.பி.யில் யூனியன் கார்பைடு ஆலையின் 337 டன் நச்சு கழிவுகள் அழிப்பு
0