வேலூர்: காட்பாடி ஜாப்ராபேட்டை, வஞ்சூர் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுவதை வேலூர் எம்பி கதிர்ஆனந்த் இன்று ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நாட்டிலேயே முதல் முறையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 1,545 தொடக்கப்பள்ளிகளில் தொடங்கப்பட்ட இத்திட்டம் பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது.
திட்டம் தொடங்கப்பட்டது முதல் அமைச்சர்கள் முதல் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அரசின் உயர்அதிகாரிகள் வரை அவ்வப்போது பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு குறித்த ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி, காட்பாடி ஜாப்ராபேட்டை மற்றும் வஞ்சூர் அரசு தொடக்கப்பள்ளிகளில் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதை வேலூர் எம்பி கதிர்ஆனந்த் இன்று ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவை வாங்கி ருசி பார்த்தார்.