டெல்லி: திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா சுரேஷ்கோபி? என கேள்வி எழுந்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதி அளிக்காதபோதும், திரைப்படங்களில் நடிக்க போவதாக சுரேஷ்கோபி அறிவித்துள்ளார். திரைப்படங்களில் நடிக்காவிட்டால் இறந்தே போவேன் என்றும் பேசினார். திரைப்படத்தில் நடிப்பதற்காக அனுமதி கோரினேன், ஆனால் அமித் ஷா அனுமதி தரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அமித் ஷா உத்தரவை நிராகரித்த சுரேஷ் கோபி?
22 படங்களில் நடிக்க உள்ளதாக கூறி அமித் ஷாவிடம் தந்த மனுவை, அவர் தூர எறிந்துவிட்டதாகவும் சுரேஷ்கோபி குற்றச்சாட்டு வைத்துள்ளார். செப்டம்பர் 6-ம் தேதி ஒத்தக்கொம்பன் படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 22 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன்; அனைத்து படங்களிலும் நடித்து முடிப்பேன் என சுரேஷ்கோபி திட்டவட்டம். ஒன்றிய அரசில் பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக உள்ளார் சுரேஷ்கோபி.
அமித் ஷா உத்தரவை மீறி நடிப்பதில் சுரேஷ்கோபி உறுதி
அமித் ஷா உத்தரவை மீறி நடிப்பதில் சுரேஷ்கோபி உறுதியுடன்
இருப்பதால் அமைச்சர் பதவியிலிருந்து விலகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் நான் மகிழ்ச்சி அடைவேன். திருச்சூரில் இருந்துகொண்டு எனது தொகுதி மக்களுக்கு நன்மை செய்வேன்.