Sunday, September 24, 2023
Home » பழவேற்காட்டில் ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் முகத்துவார சாலை பணி: எம்பி, எம்எல்ஏ அடிக்கல் நாட்டினர்

பழவேற்காட்டில் ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் முகத்துவார சாலை பணி: எம்பி, எம்எல்ஏ அடிக்கல் நாட்டினர்

by Ranjith

பொன்னேரி: பழவேற்காட்டில் நேற்று ரூ.26.85 கோடி மதிப்பில் புதிய முகத்துவார சாலை பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கே.ஜெயக்குமார் எம்பி, துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று, அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தனர். பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு ஏரி, இந்தியாவின் மிகப்பெரிய 2வது உவர்ப்புநீர் ஏரியாகும். இதை சுற்றிலும் 600க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1500க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் மீன்பிடிப்புக்காக, படகில் செல்லும் முகத்துவார பகுதி, ஏரியும் கடலும் சந்திக்கும் இடம் ஆகும்.

பருவ கால மாற்றம் மற்றும் கடல் அலையின் சீற்றம் காரணமாக அந்த இடத்தில் அடிக்கடி மணல் திட்டுகள் உருவாகி முகத்துவாரம் அடைபட்டது. இதனால் அப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். ஒவ்வொரு வருடமும் மீனவர்கள் ஒன்றுசேர்ந்து, முகத்துவாரத்தில் அடைபட்ட மணல்திட்டு பகுதிகளை படகு மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் உள்ளே சென்று தூர்வாரி வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழவேற்காடு மீனவ மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், பழவேற்காட்டில் நேற்று முன்தினம் மாலை ரூ.26.85 கோடி மதிப்பில் புதிதாக முகத்துவார சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், திருவள்ளூர் எம்பி கே.ஜெயகுமார், பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்று, புதிய முகத்துவார சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர். அப்போது, பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மீன்வளத்துறை அதிகாரிகள், மாவட்ட ஒன்றிய நகர காங்கிரஸ் நிர்வாகிகள், பழவேற்காடு மீனவர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர். இப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த எம்பி, எம்எல்ஏவுக்கு அப்பகுதி மீனவர்கள் நன்றி தெரிவித்தது குறிப்பித்தக்கது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?