Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கல்

*கூட்டத்தில் 262 மனுக்கள் பெறப்பட்டன

திருவாரூர் : திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.33 ஆயிரத்து 900 மதிப்பில் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களை கலெக்டர் மோகனச்சந்திரன் 5 பயனாளிகளுக்கு வழங்கினார்.திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 262 மனுக்கள் பெறப்பட்டன. பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 262 மனுக்களை அளித்தனர். பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மோகனசந்திரன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனு க்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

மேலும் வழக்கம் போல் தரைதளத்தில் மாற்றுதிறனாளிகளிடம் அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார். அதனைதொடர்ந்து, மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ 33 ஆயிரத்து 900 மதிப்பில் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ 5 ஆயிரத்து 600 மதிப்பில் தையல் இயந்திரம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தலா ரூ 6 ஆயிர த்து 100 வீதம் 4 பயனளிகளு க்கு தையல் இயந்திரம் ஆகி யவற்றை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஒ கலைவாணி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் தையல்நாயகி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அமுதா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.