சென்னை: அன்னை தெரசா சாரிடபுள் டிரஸ்ட் சார்பில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா, காமராஜர் அரங்கில் நடந்தது. சிறப்பு விருந்தினராக அமைச்சர் கீதா ஜீவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்எல்ஏக்கள் ராணி வேங்கடேசன், அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக, அர்ஜென்டினாவை சேர்ந்த சமூக சேவகர் ஆனா மோனுக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, என்.ஆர்.பனிகர், மலேசியாவை சேர்ந்த ரத்தின் கரண், முன்னாள் எம்எல்ஏ அபுபக்கர், சே.செந்தாமரை கண்ணன், விஜய் டிவி புகழ் பாலா, ரங்கராஜன் மகாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.ஜி.கே.தாஸ் தலைமை வகித்தார். ஏ.சேவியர், சி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாண்டிய ராஜன் வரவேற்றார். இதில், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், ராதா சஞ்சீவ், தேவ் ஆனந்த், வல்லபாய் ஜெயந்த் வாய்மே, ஆர்.எஸ்.முத்து, டி.வி.சேவியர், எஸ்.தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிவாஜி நாதன் நன்றி கூறினார்.
அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள், விருதுகள்: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
previous post