அசம்கர்: திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் 3 குழந்தைகளின் தாய் ஒருவர் தனது 5வது காதலனுடன் ஓட்டம் பிடித்ததால், பாதிக்கப்பட்ட கணவர் பல இடங்களிலும் மனைவியை தேடி வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் பகுதியை சேர்ந்த அனில் ராஜ்பர் – ரீனா தம்பதிக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அவர்களுக்கு ஒரு பெண் குழந்ைத, 2 ஆண் குழந்தைகள் உள்ளன. ஆனால் ரீனாவுக்கு ஆண் நண்பர்கள் அதிகம் என்பதால், தற்போது வேறொரு நபருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அனில் ராஜ்பர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குபதிந்து ரீனாவை தேடி வருகின்றனர். இதற்கிடையே தனது மூன்று குழந்தைகளுடன், தனது மனைவி ரீனாவை அனில் ராஜ்பர் தேடி வருகிறார்.
பொது இடங்களில் தெரிவதற்காக தனது குழந்தைகளின் கையில், தனது மனைவியை காணவில்லை என்று கூறும் போஸ்டரை ெகாடுத்து தேடி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் வேலை நிமித்தமாக சண்டிகர் சென்றேன். அங்கு ரீனாவை சந்தித்தேன். இருவருக்கும் இடையிலான நட்பானது காதலாக மாறியது. பின்னர் இருவரும் விந்தியாச்சல் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்குப் பிறகு, எனது கிராமத்திற்கு ரீனாவை அழைத்து வந்தேன். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். ஒரு பெண் குழந்தை, 2 ஆண் குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. ஆனால் ரீனா தனக்கு நிறைய நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களை சந்தித்துவிட்டு வருவதாகவும் கூறி அடிக்கடி வெளியூர் சென்று வருவார். அவர் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததால் நானும் கண்டு கொள்ளவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் ரீனாவுக்கு யாரோ ஒருவரிடம் இருந்து போன் கால் வந்தது.
கழிவறைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற ரீனா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் ரீனாவை காணவில்லை என்பதால், காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். ஒரு மாதமாகியும் ரீனாவை கண்டுபிடிக்கவில்லை. என்னுடன் 9 ஆண்டுகள் வாழ்ந்தாலும் கூட, அவருக்கு பல ஆண் நண்பர்களுடன் நெருக்கமான உறவு இருந்துள்ளது. தற்போது தனது மனைவி 5வது காதலனுடன் ஓடிவிட்டதாக தெரிகிறது. வேறுவழியின்றி எனது 3 குழந்தைகளுடன் ஊர் ஊராக சென்று என் மனைவியை தேடி வருகிறேன்’ என்று சோகத்துடன் கூறினார்.