நெல்லை: தாய் மகனை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010-ம் ஆண்டு சுப்பிரமணி மற்றும் அவரது தாயார் கோமதி அம்மாள் ஆகியோரை கொலை செய்த வழக்கில் வழங்கப்பட்டுள்ளது. சிராஜ், நாகூர் மீரன் ஆகிய 2 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி ரூ.1000 அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.