கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் தாய், தந்தை தற்கொலை செய்து கொண்டனர். பெருகோப்பனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் சரவணன்(50), கீதா(45) பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். எதிர்ப்பை மீறி மூத்த மகன் ரஞ்சித்குமார் காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் விபரீத முடிவு எடுத்துள்ளனர்.