உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொசு ஒழிப்பு தின விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தரணீஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில் கலந்துகொண்டு, கொசு ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும், கொசுக்களால் பரவும் நோய்கள், கொசு கடிப்பதால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, உத்திரமேரூர் வட்டத்தில் பணியாற்றும் தற்காலிக கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் 20 பேருக்கு, பணி உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஏசுதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், சதீஷ்குமார், சந்தோஷ்குமார், நிரஞ்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.