உதகை: உதகை மாவட்டம் இத்தலார் பகுதியில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். உதகை, குன்னூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் நான்காவது நாளாக கனமழை பெய்து வரும் நிலையில் ஆய்வு செய்து வருகிறார். மேலும் மண் சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மழை பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கூடலூர் பகுதியில் வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும் என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
உதகை மழை பாதிப்பு: அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு
147
previous post