ஊட்டி: காவல்துறையில் 13 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ேமாப்பநாய் உயிரிழந்ததை தொடர்ந்து, அதற்கு காவல் துறையினர் மாரியாதை செலுத்தினர். நீலகிரி மாவட்டம் காவல்துறையில் கடந்த 2011ம் ஆண்டு மில்டன் என்ற மோப்பநாய் பணியில் சேர்க்கப்பட்டது.இந்த நாய் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல் துறையினருக்கு உதவியாக செயல்பட்ட வந்துள்ளது. இந்நிலையில், இந்த மோப்பநாய்க்கு வயது மூப்பின் காரணமாக கடந்த ஆண்டு ஓய்வு அளிக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து காவல்துறையினரின் பராமரிப்பில் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது. கூடுதல் எஸ்பி., சவுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இந்த நாய் காக்கா தோப்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த மோப்ப நாய் நீலகிரி மாவட்டத்தில் காவல் துறையினருக்கு பல்வேறு வழக்குகளில் உதவி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.