சென்னை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிக்கை: மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியின்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அது பறப்பதற்கு ஏதுவாக கயிற்றை அசைத்த போது, கொடியின் முதல் வண்ணமான ஆரஞ்சு நிற தேசிய கொடியின் நாடா அவிழ்ந்தது. இது கீழிருந்து பார்ப்பவர்களுக்கு தலைகீழ் தோற்றமாக தெரிந்தது. தேசிய கீதம் இசைக்கப்பட்டதால், அது முடியும் வரை காத்திருந்து, பின் தேசிய கொடியை இறக்கி, அவிழ்திருந்த ஆரஞ்சு வண்ணத்தின் கொடி நாடாவினை மீண்டும் கொடி கயிற்றுடன் கட்டி ஆசிரியர்கள் சரி செய்து, தேசிய கொடி மீண்டும் ஏற்றப்பட்டது. இந்நிலையில் ஒரு சில ஊடகங்களில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது என உண்மைக்கு புறம்பான, தவறான தகவலை தொடந்து பதிவிட்டு வருகிறார்கள். இந்த தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூவரசம்பட்டு அரசு பள்ளியில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதா? அமைச்சர் மறுப்பு
0