சென்னை: இஸ்ரோ விஞ்ஞாணிகள் கூறியதாவது: லேண்டரையும், ரோவரையும் வடிவமைக்கும் போதே, மீண்டும் சூரிய ஒளி வரும்போது அவை தன்னை தானே செயல்படுத்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது. தற்போது விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் நாளை (செப்.22ம் தேதி) சூரிய ஒளி வரும். அப்போது விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் மீண்டும் தன்னை புதுப்பித்து கொண்டு தனது ஆய்வு பணிகளை நிலவில் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் லேண்டர், ரோவர் மீண்டும் ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும் தரவுகள் மூலம் விஞ்ஞானிகள் நிலவு குறித்து மேலும் ஆழமான புரிதல்களை மேற்கொள்ள முடியும். இந்த தரவுகள் மூலம் எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.