சென்னை: சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பெற்ற இந்தியா அடுத்த ஒரு வாரத்திற்குள் சூரியனை நோக்கிச் செல்லத் தயாராகி உள்ளது. சூரியன் ஆய்வு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஈசா ஏற்கனவே இந்த நோக்கத்திற்காக விண்கலங்களை அனுப்பியுள்ளது.
ஆதித்யா எல்1 திட்டத்தின் நோக்கம் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கொரோனா மற்றும் சூரியனின் முதல் மூன்று அடுக்குகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் இருக்கும் சூரியனை நெருங்குவது என்பது சாதாரண விசயம் அல்ல. மற்ற கோள்கள் குறித்த ஆய்வு போல் இல்லாமல் சூரியனை நோக்கி மேற்கொள்ளப்படும் ஆய்வு அதனின் சக்தி குறித்து அறிய உதவும். இதன் மூலம் சூரியனால் நமக்கு ஏற்படவிருக்கும் அபாயங்கள் குறித்து தெரிந்துகொள்ள இயலும். மேலும், சூரிய கதிர் வீச்சு, வெப்பநிலை, காந்த புலம் போன்றவற்றைக் குறித்து தெரிந்துகொள்ள முடியும். இந்த விண்கலம் சுமார் 1500 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலத்தில் மொத்தம் ஏழு பேலோட் கலன்கள் உள்ளன. விஎல்சி, எஸ்யுஐடி, ஏஎஸ்பிஇஎக்ஸ், பாபா, எஸ்ஓஎல்இஎக்எஸ், ஹெச்இஎல்ஒன்ஓஎஸ், மேக்னட் மீட்டர் ஆகிய கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை சூரியனின் வெளிப்புற பகுதியான கொரோனா, சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சு குறித்து ஆய்வுகளை ஆதித்யா எல்1 விண்கலம் மேற்கொள் ஆதித்யா எல்1 விண்கலம் தயாரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வேளி ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து விண்கலத்தை ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து ராக்கெட் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் ராகெட்டின் உள் சோதனைகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இன்று காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இந்நிலையில் ராக்கெட் எவுதலுக்கான 23.40 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று நண்பகல் 12.10 மணிக்கு தொடங்கியது.
ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உடன் முதலில் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் தொடர்ந்து அது பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் பாயிண்ட் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு ஆய்வுகளை மேற்கொள்ளும். சூரியனை ஆய்வு செய்ய அமெரிக்க, ரஷ்யா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே விண்கலன்கள் செலுத்தியுள்ள நிலையில் இந்த திட்டத்தில் வெற்றி கண்டால் சூரியனை ஆராயும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும். இன்று பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதால் தொலைதொடர்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இஸ்ரோ தெரிவித்துள்ளது. பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான கோயிலில் விண்கலத்தின் மாதிரியை வைத்து வழிபாடுகள் நடத்தினர்.