ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் பூமியில் விழுந்தது. விண்ணில் ஏவப்பட்டு 124 நாட்களுக்குப் பின் வடக்கு பசிபிக் கடல்பகுதியில் ராக்கெட் பாகம் விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ல் கிரையோஜெனிக் என்ஜினின் மேல்பகுதி புவி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியின் காற்று மண்டல பகுதிக்குள் நுழைந்தது. புவி மண்டல பகுதிக்குள் வந்த ராக்கெட் பாகம், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு விழுந்திருக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.