ஸ்ரீஹரிகோட்டா: நிலாவில் 14 நாட்களுக்கு பின் சந்திரயான் – 3இன் லேண்டர், ரோவரில் வெயில் படத் தொடங்கியது. இரவு முடிந்து பகல் தொடங்கியதை அடுத்து மீண்டும் ரோவர் செயல்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. கடும் குளிர் முடிந்து வெயில் வந்துள்ளதால் சூரிய ஆற்றலை பெற்று ரோவர் செயல்படக்கூடும். விக்ரம் லேண்டர், ரோவரை செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.