தேவையானவை:
மூக்கிரட்டை கீரை – 1 கப்,
துவரம்பருப்பு – 1/2 கப்,
சின்ன வெங்காயம் – 20,
பூண்டு பல் – 20,
பச்சை மிளகாய் – 2,
தக்காளி – 2,
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பெருங்காய தூள்,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய், சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். உடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். பிறகு கழுவி வைத்த கீரையை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து கீரையின் பச்சை வாசனை போனதும் கழுவி ஊறவைத்துள்ள துவரம்பருப்பினை சேர்க்கவும். அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும். பருப்பு நன்கு வெந்ததும், கொதிக்கும் போதே மத்தில் நன்கு கடைந்து பெருங்காயத் தூள் தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.