புழல்: புழல் ஊராட்சியில், ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. புழல் ஊராட்சியில், ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒன்றிய குழு தலைவர் தங்கமணி திருமால் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத்தலைவர் சாந்தி பாஸ்கரன் ஒன்றிய ஆணையாளர்கள் சித்ரா பெர்னான்டோ, பொற்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள ஏழு ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அதை சமாளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாமகேஸ்வரி, பத்மநாபன் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவக்குமார், மல்லிகா மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.